தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி கோவையில் நேற்று துவங்கியது!!

     -MMH 

தேசிய அளவிலான, 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கான ஒற்றையர் பிரிவு போட்டி, காளப்பட்டி ரோட்டில் உள்ள 'லிவோ ஸ்போர்ட்ஸ் கிளப்பில்' மூன்று நாட்கள் நடக்கிறது.இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 50க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நாக்-அவுட் முறையில் நடைபெறும் போட்டிகள் வரும் ஞாயிறு முடிவடைகிறது.இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய டென்னிஸ் சங்கத்தின் தேசிய தர வரிசை புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments