நான்கு நாட்களுக்கு நீதிமன்றம் புறக்கணிப்பு வழக்கறிஞர் சங்கம் முடிவு!!

   -MMH 

  நீதிபதியை கண்டித்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு நீதிமன்றம் புறக்கணிப்பு வழக்கறிஞர்கள் கூட்டத்தில் முடிவு.

கோவை, பீளமேடு பகுதியில் கஞ்சா விற்றது தொடர்பாக, மூன்று பேர் மீது கோவை இ. சி. , கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2018 முதல் விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 8 -ம் தேதி, இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜாமினில் விடுவிக்கப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். மூன்றாவது எதிரி குமரேசன் தரப்பு வக்கீல் பால்பாண்டியன் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இதனால் குமரேசனை மீண்டும் சிறையிலடைக்க நீதிபதி லோகேஸ்வரன் உத்தரவிட்டார். இது குறித்து வக்கீல் பால் பாண்டியன் கோவை வக்கீல் சங்கத்தில் முறையிட்டதை தொடர்ந்து, இ. சி. , கோர்ட் நீதிபதியை சந்தித்து பேசினர்.

அப்போது, சங்க நிர்வாகிகளை நீதிபதி அவமதித்தாக கூறி, மாவட்ட நீதிபதியிடம் புகார் அளித்தனர். இந்த சூழ்நிலையில், வக்கீல் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் இன்று மாலை நடந்தது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

நீதிபதியின் செயலை கண்டிக்கும் வகையில், இன்று முதல், வரும் 20 வரை, நான்கு நாட்கள், கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களை வக்கீல்கள் புறக்கணிப்பது,

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் புகார் அளிப்பது, நீதிபதியை சஸ்பெண்ட் அல்லது இடமாற்றம் செய்யாவிடில், மீண்டும் நீதிமன்றங்களை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments