கோவையில் திமுகவினரை தாக்கிய அதிமுகவினர்!!!

 

  -MMH

   கோவை நஞ்சுண்டாபுரம் மாநகராட்சி சுவரில் அதிமுகவினர் விளம்பரம் எழுதியது தொடர்பாக, அதிமுக மற்றும் திமுக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து அதிமுக நஞ்சுண்டாபுரம் பகுதி அதிமுக செயலாளர் சாரமேடு சந்திரசேகரன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தங்களை தாக்கியதாக கூறி கோவை 75வது வார்டு திமுக பொறுப்பாளர் நியான்குமார் மற்றும் திமுக மகளிரணியை சார்ந்த வாசுகி ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக நிர்வாகிகளை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ நா. கார்த்திக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில்பெரிய கடைவீதி பகுதிக்கழகம்- 2 பொறுப்பாளர் வி. ஐ. பதுருதீன், சிங்காநல்லூர் பகுதிக்கழகம்- 3 பொறுப்பாளர் ஷேக் அப்துல்லா, மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர் டவுன் பா. ஆனந்த், வட்டக்கழகப் பொறுப்பாளர் ஹைவேஸ் தண்டபாணி, ஆர். செல்வராஜ், திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments