அனைத்து போராட்டத்திற்கும் தடை விதித்து கமிஷ்னர் உத்தரவு!!

     -MMH 

சமீப காலமாக பல்வேறு அமைப்பினர்கள் ஆர்ப்பாட்டம் போராட்டம்  நினைவேந்தல் நிகழ்ச்சி ஊர்வலங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த போவதாக சமூக வலைதலங்களில் பரப்பி வருகிறார்கள். இது போன்ற பதிவுகள் கோவை மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதித்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் பொதுமக்களிடத்தில் தேவையற்ற பதற்றத்தையும் உருவாக்கும் வகையில் உள்ளதால்

கோவைமாநகரில் மாநகரில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும்.தேவையற்ற பதற்றத்தை தவிர்க்கும் விதமாக கொரானா பெருந்தொற்று தடைஉத்தரவு அமுலில் உள்ளதால் 26-11-2021 முதல் 10-12-2021வரை அனைத்து அரசியல் கட்சியினரும். அபை்பினரும்.கோவையில் ஆர்பாட்டம்/ போராட்டம் / பொதுக்கூடடம் /ஊர்வலம்/போன்றவைகளுக்கு பொதுமக்கள் நலன்கருதி அனுமதி மறுக்கப்படுகிறது.அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

எனவே அனைத்து அரசியல் கட்சியினரும்.அமைப்பினரும்.சட்டம் ஒழுங்கு கெடாமல் இருக்க பொதுமக்களின் நலன் கருதி காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோவை மாநகர ஆணையர் திரு பிரதீப்குமார் இ கா பா அவர்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்கள்!!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments