பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா விற்கு உற்சாக வரவேற்பு!!

   -MMH 

  திருப்பூரில் நடைபெறும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை விமான நிலையத்திற்கு வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விற்கு கோவை மாவட்ட பாஜக வினர் 500க்கும் மேற்பட்டோர் மலர்தூவி உற்சாக வரவேற்பளித்தனர். 

கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு மலர் கிரீடம் அணிவித்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்வில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மத்திய தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் எல்.முருகன், கோவை மாவட்டம் மாவட்ட தலைவர்  நந்தகுமார் ,மாநில பொதுசெயலாளர் ஜி கே செல்வகுமார், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ,மாவட்ட பொதுசெயலாளர் ரமேஷ் குமார் அறிவுறுத்தலின்படி மாவட்ட கல்விப்பிரிவு தலைவர் எஸ் ராஜசேகர் தேசிய தலைவர் ஜே பி நாட்டா அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றனர் அவர்களுக்கு மாலை அணிவித்து கிரீடம் சூட்டி வரவேற்றனர் மற்றும் மாவட்ட செயலாளர் கல்விப்பிரிவு ஸ்ரீதேவி  மற்றும் நிர்வாகிகள் பாரதிய ஜனதா மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments