ஆம்பூர் அருகே கிணத்தை காணோம் திரைப்பட நடிகர் வடிவேலு பாணியில் புலம்பும் விவசாயிகள்!!

   -MMH 

   ஆம்பூர் அடுத்த பள்ளித் தெரு கிராமத்தில் கிணத்தை காணோம் என்று திரைப்பட நடிகர் வடிவேலு பாணியில் புலம்பும் விவசாயிகள் ஆம்பூர் அடுத்த பள்ளி தெரு கிராமத்தை சேர்ந்தவர்கள் சீனிவாசன் ,  ரவி இருவரும் சகோதரர்கள் இவர்கள் தங்கள் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் ஆம்பூர் அடுத்த பள்ளி தெரு கிராமத்தில் உள்ளது. நிலத்தில் நான்கு ஏக்கர் தென்னை மரம் அரை ஏக்கர் வாழை மரம் அரை ஏக்கர் கால்நடைகளுக்கு தீவனப் பயிர்களை பயிரிட்டு உள்ளனர் . மேலும் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக 

சுமார் 60 ஆண்டுகாலமாக 40 அடி அகலம் மற்றும் 100 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்று இருந்தது . கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையின் காரணமாக நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் 100 அடி கிணறு உள்வாங்கி சேதமடைந்தது இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை விவசாயிகள் நிலத்திற்கு வந்து பார்த்தபோது அங்கிருந்த கிணறு காணவில்லை . கிணறு சேதமடைந்தது தெரியவந்தது இதுகுறித்து விவசாயிகள் சீனிவாசன் ரவி ஆகியோர் கூறுகையில் இந்த கிணற்று நீரைக் கொண்டு ஐந்து ஏக்கர் அளவில் தென்னை மரங்கள் மற்றும் ஒரு ஏக்கர் வாழை மரம் கால்நடைகளுக்கு தீவன பயிர் ஆகியவை பயிர் செய்து வந்தோம் தற்பொழுது கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லாமல் மிகவும் பாதிப்படைந்துள்ளது .மேலும் வறட்சி காலங்களில் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய இயலாது விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் அதேபோல் கினத்திலிருந்த 5 எச்பி திறன்கொண்ட மின் மோட்டார் மற்றும் வயர்கள் பைப்புகள் ஆகியவை அப்படியே கிணற்றில் மூழ்கி விட்டன பயிர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு மிகவும் மன உளைச்சலில் உள்ளோம் .எனவே அரசு அதிகாரிகள் இதனை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர் . கிணற்றை காணோம் என்கின்ற செய்தி அப்பகுதி முழுவதும் பரவி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

-ரமேஷ், வேலூர்.

Comments