பேரூர் படித்துறையில் திதி கொடுக்க வந்தவர்களால் போக்குவரத்து நெரிசல்! வாகன ஓட்டிகள் கடும் அவதி! !

 

  -MMH

  பேரூர் படித்துறையில் திதி கொடுக்க வந்தவர்களால்  பேரூர் - வேடபட்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்! வாகன ஓட்டிகள் கடும் அவதி! !

பேரூர் படித்துறையில், உயிரிழந்தவர்களுக்கு திதி கொடுப்பதற்காக, ஏராளமான பொதுமக்கள் வந்ததால், பேரூர் -- வேடபட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.உயிரிழந்தவர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கும் முக்கிய தளமாக, பேரூர் நொய்யலாற்றங்கரை உள்ளது.                   

இங்கு, ஆண்டு முழுவதும், தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த மக்கள், தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வந்து செல்வார்கள்.விடுமுறை தினமான நேற்று, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய, நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று திரண்டனர்.              

அங்கு வந்த பொதுமக்கள், தங்களின் வாகனங்களை, பேரூர் - வேடபட்டி சாலையின் இரு ஓரங்களிலும் நிறுத்தினர். சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், அச்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டே அந்தப் பகுதியை கடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது 

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments