கோவை செல்வபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும்! அமைச்சரிடம் ம.ஜ.க.வினர்.மனு!

 

-MMH

     கோவை செல்வபுரத்தில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, அவர்கள் வருகை புரிந்தார். அவருடன் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா, உள்ளிட்டவர்களும் வருகை தந்திருந்தனர். அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் 77,வது வார்டு செயலாளர் பீர்முகம்மது, அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் அமைச்சரிடம் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை அளித்தனர்.

அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,

வார்டு எண் 77, செல்வபுரம்  ரங்கசாமி காலனி, பெரியதம்பி நகர், ராமமூர்த்தி ரோடு, ஹவுசிங் யூனிட் பகுதி,  ஆகிய பகுதிகளில் தார் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது சிறிய மழை வந்தால் கூட இந்தப் பகுதிகளில் மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலையில் உள்ளது வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி கீழே விழக்கூடிய சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகின்றது கடந்த ஆட்சியில் இந்த சாலை களுக்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் இதுவரை நடைபெறவில்லை ஆகவே தாங்கள் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்த பகுதிகளில் விரைவாக தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வார்டு எண் 77, செல்வபுரம் பகுதியில் ராமமூர்த்தி ரோடு பிரதான சாலையில் மாடுகள் மேய்ந்து வருகின்றன இதுகுறித்து மாநகராட்சி இடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை மாடுகளால் வாகன ஓட்டிகள் கீழே விழக்கூடிய சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன மேலும் ரங்கசாமி காலனி, பெரியதம்பி நகர், பகுதிகளில் நாய்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது இதனால் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள், பாடசாலைகளுக்கு செல்லக்கூடிய குழந்தைகள், மிகவும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலையே உள்ளது மாநகராட்சி தரப்பில் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகவே தாங்கள் இப்பிரச்சனையை சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

செல்வபுரம் பேரூர் பிரதான சாலையில் ஆங்காங்கே இருக்கும் பேருந்து நிலையங்கள் நிழற்குடைகள் இல்லாத நிலையில் உள்ளது மேலும் அனைத்து பேருந்து நிலையங்களும் குறுக்கு சாலைகளுக்கு அருகருகே உள்ளதால் பேருந்துகள் அந்த சாலைகளுக்கு நடுவே நின்று பயணிகளை ஏற்றிச் செல்கிறது இதனால் அந்த சாலையில் பெரிதும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது ஆகவே தாங்கள் இந்த சாலையில் அகலமான இடங்களில் பேருந்து நிழற்குடைகளை அமைத்து பேருந்துகள் அங்கு நின்று செல்ல வசதி ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சமீபகாலமாக செல்வபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அதிகப்படியான மின் கட்டணங்கள் வந்துகொண்டிருக்கிறது சரியான முறையில் கணக்கெடுப்பது இல்லை மின் கட்டணம் அதிகம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில்களும் தருவதில்லை ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் கட்டி கொண்டிருந்தவர்கள் தற்போது மூன்றாயிரம், நான்காயிரம், என கட்ட வேண்டிய நிலை உள்ளது ஆகவே தாங்கள் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு இதற்கான தீர்வை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். செல்வபுரம் பகுதியில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை சீர்கெடுக்கும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது ஆகவே தாங்கள் இது குறித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

செல்வபுரம் எல்.ஐ.சி காலனி அருகே பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மதுக்கடையை அங்கிருந்து உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம், இந்த மதுக்கடை யால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் மது அருந்துபவர்கள் சில நேரங்களில் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது தாக்குதல் தொடுக்க கூடிய நிலைகளும் அவ்வப்போது ஏற்படுகிறது அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களிலும் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வருகிறது. பொதுமக்களை பெரிதும் பாதிக்கக் கூடிய இந்த மதுக்கடையை தாங்கள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் 77,வது வார்டு பொருளாளர் இஸ்மியில்,  78,வது வார்டு பொருளாளர் சமீர்கான், 77,வது வார்டு துணை செயலாளர் கமால் பாஷா, 78,வது வார்டு துணை செயலாளர் சம்சுதீன், இளைஞரணி நிர்வாகிகள் அப்பாஸ், செளகத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments