கோவையில் அனுதிக்கப்பட்ட நேரத்தை மீறியவர்கள் மீது வழக்கு!!

 

-MMH 

     நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. சுற்றுசூழல் மாசுபாடு ஏற்படுவதை தடுக்க ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை மீறி அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து பட்டாசு வெடித்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை மீறி கோவை புறநகர் மாவட்டத்தில் அனுதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக பெரியநாயக்கன் பாளையம் சப்-டிவிசனில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட் டனர். பேரூர் சப்-டிவிசனில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

கருமத்தம்பட்டி சப்-டிவிசனில் 5 வழக்குகளும், பொள்ளாச்சி சப்-டிவிசனில் 4 வழக்குகளும், வால்பாறை சப்- டிவிசனில் 5 வழக்குகளும், மேட்டுப்பாளையம் சப்-டிவிசனில் 3 வழக்குகளும் என மொத்தம் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 32 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாநகரில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில மொத்தமாக 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments