கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பிரதீப் குமார், இ.கா.ப. அவர்கள் தலைமையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆலோசனை கூட்டம்!!

    -MMH 

கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பிரதீப் குமார்,இ.கா.ப., அவர்கள் தலைமையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள், ஆட்கடத்தல் மற்றும் குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர்(AHTU/ACTU), தனிச் சிறுவர் உதவி காவல் பிரிவு(JAP)ஆய்வாளர்  ஆகியோருடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. 

இக்கூட்டத்தில்  வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்துவதை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தை கடத்தல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காப்பகங்களில் ஆய்வு செய்து, முறையற்று இயங்கும் காப்பகங்களில் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஏதேனும் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு இருப்பின் அவர்களை மீட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சட்டத்திற்கு முரணான குழந்தைகளை கண்காணித்து அவர்களுக்கு தேவையான புனர்வாழ்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலந்தாய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார்!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments