ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை!!

   -MMH 

   ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் தமிழக அரசு மீண்டும் கடந்த ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை அப்படியே திரும்ப வெளியிட்டுள்ளது. சட்டம் சார்ந்த புரிதலோ , நீதிமன்றம் அதுகுறித்து தெரிவித்த எந்த கருத்துக்களோ பின்பற்றப்படவில்லை.

தமிழக முதலமைச்சர் உடனடியாக இதன் விளக்கத்தை எங்களைச் போன்ற செயல்பாட்டாளர்கள் மூலம் கேட்டறிய வேண்டும். திரும்ப திரும்ப   அதிகாரிகள் சொல்வதை கேட்டு சிறைவாசிகள் விடுதலையில் பாதகமான முடிவுகளை எடுப்பது பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதலமைச்சர் அவர்களை மதுரையில் தேர்தலுக்கு முன் நேரில் சந்தித்து பேசினோம்.ஆலோசிப்பதாய் சொன்னார். சட்டமன்றத்தில் 14 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த அனைவரையும் விடுவிக்க வழி பிறக்கும் என்ற நம்பிக்கை தரும் வகையில் அவரின் அறிவிப்பு இருந்தது.ஆனால் 15.11.2021 வெளியான அது குறித்த அரசாணை கடந்த ஆட்சியில் போட்ட அதே அரசாணை. 15 குற்ற வகைகளை பட்டியலிட்டு   அந்த குற்றங்களில் தண்டனை பெற்றவர்கள் விடுதலை பெற முடியாது என அறிவித்துள்ளது.

இந்த பாகுபாடு சிறைவாசிகளுக்கு நிகழ்ந்துள்ள அநீதி. இதில் எந்த நியாயமும் இல்லை. சிறைவாசம் பொதுவாக இருக்கும் போது விடுதலையும் பொதுவாக இருக்க வேண்டும். தண்டனையை வகைப்படுத்தி விடுதலையை முடிவு செய்யக்கூடாது .சிறைவாசி சிறையில் கழித்த ஆண்டுகளை மட்டுமே அவர்கள் விடுதலைக்கு கணக்கில் கொள்ளவேண்டும்.

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வீரபாரதி/ எதிர் / தமிழக அரசு வழக்கில் முன் விடுதலை பரிசீலிக்க கூடிய குற்றத்தில் தண்டனை பெற்றவர்கள் விடுதலையை பத்தாண்டு தண்டனைக்கு பின்னும் , பரிசீலனைக்கு ஏற்க முடியாத குற்றம் புரிந்தவர் விடுதலையை(அரசாணையில் உள்ள 15 குற்ற வகைகள்) 14ஆண்டு சிறைவாசம் பின்னர் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியது. சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் ராஜ்குமார் என்ற வழக்கில் 14 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த எல்லா கைதிகளையும் விடுவிக்க மாநில அரசு அதன் 161 அரசமைப்புச் சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி கோரியது. ஆளுனரின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டாம் என அறிவுறுத்தியது.

தமிழக கோவை சிறையில் வீரப்பன் சகோதரர் மாதையன் மற்றும் ஆண்டிப்பட்டி, பெருமாள் ஆகியோர் கடந்த 32 வருடம் சிறையில் வாடுகின்றனர். அவர்கள் நோய் வயோதிகம் கண்டவர்கள்.முஸ்லீம் சிறைவாசிகள் 25 ஆண்டுகளாக வாடுகின்றனர். சிறை சீர்த்திருத்தி, மீண்டும் குடும்பம் சமூகத்தோடு வாழ அனுமதிக்க வேண்டும்.சிறையிலையே சாகடிக்க கூடாது.

தமிழக அரசு முன் விடுதலை என்பதை எல்லா மாதமும் பரிசீலிக்க வேண்டும். 

மனித உரிமை மற்றும் நேயத்தோடு இதனை அனுக வேண்டும்.

தமிழக முதலமைச்சர் நேரிடையாக தலையீடு செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments