ஓட்டேரியில் படகுசவாரி ஆட்சியர் அறிவிப்பு !

    -MMH 

   வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு பெ. குமரவேல் பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு ஏ பி நந்த குமார் அவர்களும் விருப்பாச்சிபுரம் பகுதியில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட விருப்பாச்சிபுரம் பகுதியில் கங்கை அம்மன் கோவில் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி தூர்வாரி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட பணிகள் குறித்தும் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளவும் மேலும் அப்பகுதி கழிவுநீர் கால்வாய்கள் சுத்தப்படுத்தவும் அருகிலுள்ள ரத்தின கவுண்டர் தெரு குளத்திலும் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளதை பார்வையிட்டு அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தவும் சேனாதிபதி தெரு சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் உடனடியாக சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளவும் மற்றும் இப்பகுதி முழுவதும் உள்ள 100 புதியதாக தார் சாலைகள் செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் தற்போது நிலையில் சாலைகள் தரமாக கட்டமைக்கப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்பகுதியில் உள்ள தானியகிடங்கு அருகாமையில் அப்பகுதி மக்கள் சுடுகாட்டிற்கு செல்வதற்கு வழி வேண்டும் என நீண்ட கால கோரிக்கையாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்ததால் அப்பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்து தொடர்ந்து ஓட்டேரி ஏரியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு பெ குமரவேல் பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு ஏ பி நந்தகுமார் அவர்கள் படகு சுற்றுலா தலமாக மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

-ரமேஷ், வேலூர்.


Comments