"குழந்தைகள் நண்பன் ‌வார விழா" நிறைவு நிகழ்ச்சி! அரளிகோட்டையில் கொண்டாட்டம்!

 

-MMH

    சிவகங்கை மாவட்ட சைல்டுலைன் 1098 சார்பில் நவம்பர் 14 முதல் 19 வரை குழந்தைகள் நண்பன் ‌ வார விழா கொண்டாடப்பட்டது. நிறைவு நிகழ்ச்சியாக அரளிகோட்டை ஊராட்சியில் திறந்த வெளி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சைல்டுலைன் உறுப்பினர் மலைக்கண்ணண் வரவேற்றுப் பேசினார். 

ஊராட்சி மன்றத்தலைவி புவனேஸ்வரி தலைமை தாங்கினார். சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் பாபு, சைல்டுலைன் 1098 பற்றி எடுத்துரைத்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூகப்பணியாளர் மகாலட்சுமி குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்து விளக்கமளித்தார்.

சைல்டு லைன் ஆற்றுப்படுத்தினர் ஜூலியட் வனிதா, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பேசினார். மேலும், இக்௯ட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், கிராம செவிலியர்கள், ஊராட்சிமன்றத் துணைத் தலைவி மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். சைல்டு லைன் உறுப்பினர் கார்த்திகேயன் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியை சைல்டு லைன் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments