மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் மக்கள் நீதி மய்யம்!!

       -MMH 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை சாலையில் அம்பராம்பாளையம் ஆல்வா ஹாஸ்பிடல் அருகே  நெடுஞ்சாலையில் பல விபத்துகளையும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வந்த அபாய குழியை நெடுஞ்சாலைத்துறையினர் கண்டும் காணாமல் இருந்து வந்த சூழ்நிலையில் மேலும் பல விபத்துக்களை ஏற்படுத்த  காத்திருந்த அபாய குழியை யாரும் கண்டும் காணாமல் கடந்த சென்று வந்தனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம்  கோவை மாவட்டம் வால்பாறை பகுதி மாவட்ட துணை செயலாளர் அம்பராம்பாளையம் கமல் பாவா பார்வைக்கு வந்தது. இதனையடுத்து காலதாமதம் செய்யாமல் உடனடியாக தனது கட்சி உறவுகளிடம் எடுத்துரைத்து ஒன்றிணைந்து காங்கிரட் கலவை கொண்டு அபாய குழியை மூடினார்.

தனக்கென என்று கடந்து போகாமல் தனக்கென ஒரு சமூக பாதையை உருவாக்கி சமூக சேவையில் ஈடுபட்டு வரும் அம்பராம்பாளையம் கமல் பாபாவை அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Comments