எஸ்.புதூரில் தனியாக வசித்து வந்த மின்வாரிய ஊழியர் மரணம்! உலகம்பட்டி காவல்துறையினர் விசாரணை!

 

-MMH

            தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் முத்துராஜாங்கம் (வயது48). இவர் மின்வாரிய ஊழியராக சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஒன்றறை வருடங்களுக்கு  முன் சிவங்கை மாவட்டம், எஸ்.புதூர் துணை மின்நிலையத்திற்கு பணியிட மாறுதலாகி வந்து மின் கணக்கீட்டாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். முத்துராஜாங்கம் எஸ்.புதூரில் கணேசன் என்பவரது வீட்டில் தனியாக வாடகைக்கு வசித்து வந்துள்ளார். நேற்று வழக்கம் போல் மதிய உணவு அருந்திவிட்டு உறங்கி இருக்கிறார். அந்த நிலையிலேயே இறந்து கிடந்திருக்கிறார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற உலகம்பட்டி காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி, பிணக்கூறாய்வுக்காக பொன்னமராவதி பாப்பாயி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முத்துராஜாங்கத்தின் மனைவி பிரவீனா, உலகம்பட்டி காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில் உலகம்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பிணக்கூறாய்வுக்குப் பின் முத்துராஜாங்கத்தின் உடல், அவரது உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments