எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது!!

   -MMH 

  எஸ்டிபிஐ கட்சியின் கோவைமாவட்செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர்A. முஸ்தபா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின்தொடக்கமாக மாவட்ட செயலாளர் ஷாநவாஸ் அவர்கள் வரவேற்புரைநிகழ்த்தினார். கூட்டத்தில்நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள். வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட25, வார்டுகளில்போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.

ஏழைகளை வஞ்சிக்கும் மத்திய அரசின் பெட்ரோல்,டீசல்,விலையேற்றத்தை

கண்டித்து 20,ஆம் தேதி மாலை 5, மணியளவில் குனியமுத்தூர் வகாப் பெட்ரோல் பங்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

வருகின்ற டிசம்பர் 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் விதமாக கோவையில் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி, துடியலூர் கவுண்டம்பாளையம் தொகுதி ஆகிய இரண்டு இடங்களில் காலை 10.00 அளவில் நீதிக்கான ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

தேர்தல் காலங்களில் வாக்குறுதி அளிப்பது வெற்றி பெற்ற பின் சிறுபான்மை சமூகத்தை தொடர்ந்து ஏமாற்றுவதும் அனைத்து கட்சிகளின் வேலை.

சிறைவாசிகள்  விடுதலை சம்பந்தமாக அரசின் அறிவிப்பு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் ஆயில் சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக அரசின் அறிக்கை சிறுபான்மை சமூகத்திற்கு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.

விடுதலையை எதிர்பார்த்து ஏமாந்துபோன சமூகம் சார்ந்த அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி சிறைவாசிகள் விடியல் சம்பந்தமான மிகப்பெரிய போராட்டத்தை திட்டமிடுவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக தொகுதி செயலாளர்  AJ. உசேன் அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments