மதுக்கரையில் கொலையாளி கைது!

  -MMH

   கோவை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் வரதராஜ்(50). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 2 மாதங்களாக கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள காங்கேயம்பாளையம் பூந்தோட்டம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இவரது பக்கத்து வீட்டில் கோவைப்புதூரை சேர்ந்த ஆனந்தன் (33) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இருவரும் கட்டிட வேலைக்கு ஒன்றாக சென்று வந்த நிலையில், நாள்தோறும் சேர்ந்து மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். 

நேற்று முன்தினம் இரவு இருவரும் வழக்கம்போல் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது, வரதராஜன் தன்னிடம் இரவல் வாங்கிய மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பை திருப்பி தராமல் இருந்தது தொடர்பாக ஆனந்தனிடம் கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்தன் அருகில் கிடந்த உளியை எடுத்து வரதராஜன் மார்பு, கைகளில் பலத்த குத்து விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வரதராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஆனந்தனை தேடி வந்தனர். இந்த நிலையில், மதுக்கரையில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், கோவை.

Comments