பள்ளிகள் திறப்பை முன்னிட்டு தண்ணீர்பந்தல் ராமன் செட்டியார் பள்ளியில் குழந்தைகளுக்கு அமோக வரவேற்பு..!!!

 

  -MMH

  தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்து சகஜ நிலை திரும்பிய சூழ்நிலையில் தமிழக அரசின் ஆணைப்படி இன்று முதல் 1 ஆம் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பை அடுத்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. 

முதல்வர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 17 மாதங்கள் கழித்து பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பள்ளி நிர்வாகம் குழந்தைகளை பள்ளி ஆசிரியர்கள் பள்ளி வாயிலில் நின்று இனிப்புகள் கொடுத்து குழந்தைகளை உற்சாகப்படுத்தி வரவேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இதனடிப்படையில் தண்ணீர்ப் பந்தலில் இயங்கி வரும் ராமன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாணவர்களின் வருகையை அடுத்து மேள தாளங்கள் முழங்க , பூக்கள் தூவி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி தலைமை ஆசிரியை லதா வெங்கடேசன் P.H.D அவர்கள் ஆசிரியர் குழுவுடன் இணைந்து குழந்தைகளை கோலாகலமாக வரவேற்ற நிகழ்வு கண்களுக்கு விருந்து அளிப்பதாகும் பெற்றோருக்கு மகிழ்வையும் ஏற்படுத்தியது. 

அதுமட்டுமின்றி கொரோனா வின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுப்படி அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து குழந்தைகளுக்கு பாதுகாப்பான கல்வியை வழங்குவோம் என்று தலைமை ஆசிரியை அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார். ஏற்கனவே 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முகம்மது சாதிக் அலி.

Comments