இருசக்கர வாகன ஓட்டியின் அலட்சியத்தால் குழந்தையின் காலில் எலும்பு முறிவு! தொடர் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம்!!

   -MMH 

   பொள்ளாச்சி தமிழக கேரள எல்லைப் பகுதியான பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பெருமாட்டி பஞ்சாயத்து மீனாட்சிபுரம் பகுதியிலிருந்து கோபாலபுரம் செல்லும் சாலையில்  மூலத்துறை கிராமத்துக்கு உட்பட்ட முத்துச்சாமிபுதூர் எல்லைப் பகுதியில் மிகவும் ஆபத்தான வளைவு பகுதி ஒன்று உள்ளது இந்த வளைவுப் பகுதியை கடந்ததும் பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் பிரசித்தி பெற்ற  ஐயப்பன் கோவில், இதனையடுத்து குழந்தைகள் அதிகம் வந்து செல்லும் அங்கன்வாடி, இதனையடுத்து குழந்தைகள் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதிகள் என குழந்தைகள் அதிகம் உள்ள பகுதியாக இந்த பகுதி காணப்படுகிறது.

இந்நிலையில் ஆபத்தான வளைவுப் பகுதியை கடந்ததும் ஊர் பகுதியில்  சாலை நேர் கோணத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்கின்றனர் குழந்தைகள் சாலையை கடக்க முற்படும்போது அதிவேகமாக வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கடி இப்பகுதியில் விபத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம்  4 வயது பெண் குழந்தை அங்கன்வாடி அருகே இருசக்கர வாகனத்தில் அடிபட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலம் பெற்று வீடு திரும்பினார். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் அங்கன்வாடி அருகே 8 வயது பெண் குழந்தை இருசக்கர வாகனத்தில் அடிபட்டு கொழிஞ்சாம்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்  குழந்தைக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆப்ரேஷன் செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கன்வாடி அருகே அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு  லேசான காயங்களுடன் குழந்தைகள் தப்பிப்பது தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் இந்த இரு வேறு விபத்துகள் அடுத்தடுத்து ஒரே இடத்தில் நடந்ததால் குழந்தைகளின் பெற்றோர்களும் இப்பகுதியிலுள்ள பொதுமக்களும் மிகுந்த அச்சம் கொண்டுள்ளனர்.

இந்த இரு வேறு விபத்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இந்தப் பகுதியில் இனிவரும் காலங்களில் விபத்துகள் நடக்காமல் இருக்க வேகத்தடைகள் அமைத்தும் எச்சரிக்கை பலகைகள் வைத்தும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நெடுஞ்சாலை துறையினருக்கு முத்துசாமிபுதூர் ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

தமிழக துணை தலைமை நிருபர், 

-M.சுரேஷ்குமார். 

நாளைய வரலாறு வாசகர்களே உங்கள் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை செய்தியாக வெளியிட நாங்கள் தயாராக உள்ளோம் புகைப்படம் மற்றும் செய்தி அனுப்ப  +91 9942820022.

Comments