ரேஷன் கடையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்!! குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் பரபரப்பு! !

   -MMH 

   வால்பாறையில் உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்துக்கு உட் பட்ட வனப்பகுதியிலும், தேயிலை தோட்டங்களிலும் பட்டப் பகலில் காட்டு யானைகள் கூட்டங்கூட்டமாக சுற்றித்திரிந்து வருகிறது. 

குறிப்பாக தமிழக-கேரள எல்லையில் உள்ள சிங்கோனா, பன்னி மேடு, தோணிமுடி, ஹைபாரஸ்ட், நல்லமுடி, ஆனைமுடி, சேக்கல் முடி உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும் இந்த யானைகள் நடமாடி வருகின்றன. 

இந்த நிலையில் 10 யானைகள் கொண்ட கூட்டம் நேற்று அதி காலை வனப்பகுதியை விட்டு வெளியே வந்தது. பின்னர் தாய் முடி எஸ்டேட் பகுதியில் புகுந்த யானைகள் அங்கிருந்த டீ கடையை உடைத்து சேப்படுத்தியது. 

பின்னர் அங்கிருந்து ஆனைமுடி தோட்ட தொழிலாளர் குடியிருப்புக்குள் புகுந்து அங்குள்ள மகளிர் சுயஉதவிக்குழு ரேஷன் கடையை உடைத்தது. பிறகு கடையில் இருந்த பொருட் கள் முழுவதையும் வெளியே எடுத்து தின்றும், மிதித்தும் சேதப் படுத்தியது.  

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று அந்த யானைகளை துரத்தினார்கள். இந்த யானைகள் கூட்டம் வால்பாறையின் முக்கிய சுற்றுலா மையமாக விளங்கும் நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதியில் உள்ள வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு உள்ளது. 

இதனால் அந்த பகுதியில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுட்ட தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து அங்கேயே காட்டு யானைகள் நிற்பதால் நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இதனால் இந்த பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். அதுபோன்று அங்கு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

மேலும் ரேஷன் கடையை யானைகள் சேதப்படுத்தியதால், பொது இடத்தில் வைத்து ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன..

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-S.ராஜேந்திரன்,

திவ்யா குமார் வால்பாறை.

Comments