தீபாவளிபண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்ட்டது!!

   -MMH 

  கோவை வடவள்ளி பகுதியில் பாரதமாதா நற்பணி அறக்கட்டளை சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற இல்லங்களுக்கு உணவு உடை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கோவை பாரதமாதா நற்பணி அறக்கட்டளை சார்பாக, கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகள் செய்தும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

அதேபோல, ஒவ்வொரு தீபாவளி நாளும் ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று , உணவு உடை பழங்கள் மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கி தீபாவளி பண்டிகை நாள் முழுவதும் அவர்களுடனே இருந்து பண்டிகை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பாரதமாதா நற்பணி அறக்கட்டளையின் ஆண்டு விழா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு நிவாராணம் வழங்குவது, மற்றும் தீபாவளி பண்டிகைக்கு ஆதரவற்ற இல்லங்களுக்கு உணவு, உடை, மற்றும் அத்தாயாவாசிய பொருட்கள் வழங்குவது என முப்பெரும் விழா நடைபெற்றது.

அதன் படி கோவை வடவள்ளி கோகுலம் சேவாஸ்ரமம் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு உணவு, உடை, பழங்கள் மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்களை அறக்கட்டளையினர் வழங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments