பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் உள்ள குறைகளை களைய புதிய தணிக்கை பிரிவு தொடக்கம் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு !!

 

-MMH

      கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பட்டயக் கணக்காளர்கள் இன் 53வது தென் மண்டல மாநாடு நடைபெற்றது மாநாட்டிற்கான ஏற்பாடுகளை தென்மண்டல பட்டய கணக்காளர்கள் தலைவர் ஜலபதி செய்திருந்தார்.

இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு பேசுகையில் தென்மண்டல கவுன்சில் வரலாற்றில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டய கணக்காளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர் என்பதை கேட்டு பெருமிதம் கொள்கிறேன், தற்போது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மழை வெள்ள பாதிப்பு இருப்பதால் நிவாரண பணிகளில் உள்ள தான் நேரில் வர இயலவில்லை இந்திய பட்டயக் கணக்காளர்கள் சென்னை அலுவலகத்திற்கு வந்த ஒரே தலைவர் கலைஞர் அவர்கள்தான் பட்டயக் கணக்காளர் கழகத்தின் ஜெகதீசன் கலைஞருடன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நட்புணர்வுடன் இருந்தார் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் தடுப்பூசி முகாம் பேரிடர் காலங்களில் நிதி அளிப்பது என சமூக பொறுப்புணர்வுடன் பட்டய கணக்காளர்கள் கழகம் செயல்படுகிறது, பழைய கணக்காளர்களின் அறிவுத்திறன் நாட்டை ஆள்பவர்கள் கார்ப்பரேட்டுகளுக்கு மூன்றுக்கும் உதவுகின்றது. 

அதேபோல் அரசுக்கு உதவுவதுடன் நாட்டின் வளர்ச்சிக்கும் பட்டயக் கணக்காளர்கள் துணை நிற்கின்றனர், பட்டய கணக்காளர்கள் நாட்டின் வளர்ச்சிக்கான பங்களிப்பாளர்கள் என சொல்லிக் கொள்வது தான் சரியாக இருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் பட்டய கணக்காளர்கள் பங்கு முக்கியமானது இந்த பெயர் நிலைத்து இருக்க அரசின் கரங்களை வலுப்படுத்த கற்றல் காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள்ளுதல் அவசியம் இது போன்ற நிகழ்வுகளில் ஒன்றிய மாநில அளவில் அழைப்பது இன்னும் தேவைகளை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும், உயர்பதவிகளில் குழுக்களில் பட்டய கணக்காளர்கள் இருக்கின்றனர் அதேபோல பொருளாதாரம் ஊழல் தடுப்பு போன்றவற்றிற்காக புதிய தணிக்கை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது பட்டய கணக்காளர்கள் பொருளாதார பாதுகாவலர்களாக உயர்ந்து இருக்கின்றீர்கள் பட்டயக் கணக்காளர் களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு அளிக்கும் என்றார்.

- சீனி,போத்தனூர்.

Comments