நீண்ட நாளுக்கு பின் ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றி சொன்ன MLA!!

   -MMH 

   கோவை: முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற கொரடாவுமான எஸ். பி. வேலுமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தன்னை 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றிபெறவைத்த வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்து வருகிறார்.

மேலும் அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கழக கொடியேற்றி கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கௌரவபடுத்துகிறார்.

மேலும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவுதிட்டத்தை துவக்கிவைத்து, நலதிட்ட உதவிகளையும் வழங்கிவருகிறார்!!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை.

Comments