பொள்ளாச்சியில் 12 ஆயிரம் மதுபாட்டில்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் தரையில் கொட்டி அழித்தனர்!!

 -MMH 

பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மதுபாட்டில்கள் மற்றும் கர்நாடகா, கேரளாவில் இருந்து விற்பனைக்காக பொள்ளாச்சிக்கு கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் என ரூ.20 லட்சம் மதிப்பிலான 12 ஆயிரம் மதுபாட்டில்களை அமலாக்கத்துறை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.

இந்நிலையில், கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்பட்ட 12 ஆயிரம் மதுபாட்டில்களை அழிக்கும் பணி நேற்று  பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள காலி இடத்தில்  நடைபெற்றது.  அமலாக்கத்துறை டிஎஸ்பி செல்வராஜ், ஆய்வாளர் மீனா பிரியா மற்றும் காவல்துறையினர் தரையில் கொட்டி அழித்தனர். இந்நிகழ்வின் போது கலால்துறை அதிகாரி விஜயகுமார், உதவி ஆய்வாளர் சுரேந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

-M.சுரேஷ் குமார்.

Comments