கோவை சரவணம்பட்டி புரோசோன் மாலில் டிசம்பர் 17 முதல் ஜனவரி 2 ம் தேதி வரை சிறப்பு கிறிஸ்துமஸ் ஷாப்பிங் திருவிழா துவக்கம்!!

 

-MMH

           கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோசோன் மாலில் தீபாவளி,பொங்கல் கிறிஸ்துமஸ் என  ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் சிறப்பு ஷாப்பிங் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மெர்ரிலிசியஸ் எனும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் சிறப்பு விற்பனை துவங்கியது. டிசம்பர் 17 ஆம் தேதி துவங்கி ஜனவரி 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இதற்கான துவக்க விழா மால் வளாகத்தில் நடைபெற்றது.இதில்,,மால் வளாகத்தில், பிரமாண்டமான சிவப்பு அலங்காரத்துடன் கூடிய கிறிஸ்துமஸ் பண்டிகை சூழல், மற்றும் கிறிஸ்துமஸ் மரத்துடன் கூடிய ஆடம்பரமான சிவப்பு சாண்டா-ஹவுஸ் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஷாப்பிங் செய்ய வருபவர்களை கவரும் விதமாக வணிக வளாகத்தை சுற்றி வித விதமான செல்ஃபி பாயிண்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக,,இங்கு உள்ள பெரும்பான்மையான ஷோரூம்களில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருவதாகவும்,மேலும்,டிசம்பர் 17 ந்தேதி துவங்கி ஜனவரி 2 ஆம் தேதி வரை  1999 ரூபாய்க்கு பொருட்கள் வாங்குபவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு,இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஸ்டெர்லிங் ரிசார்ட்டில் மூன்று நாட்கள் இலவசமாக உணவுடன் தங்கும்  வசதி வழங்கப்பட உள்ளதாக மாலின்  நிதி மற்றும் நிர்வாக மேலாளர் பாபு தெரிவித்துள்ளார். கோவை புரோசோன் மாலில் துவங்கிய ஷாப்பிங் திருவிழா கோவை வாழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

- சீனி,போத்தனூர்.

Comments