22வது வார்டுக்கு உட்பட்ட சேரன் மாநகர் பகுதியில் பூத் முகவர்கள் கூட்டம்..!!

 -MMH 

கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியில் பூத் முகவர்கள் கூட்டம் இன்று காலை கோவை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு பையா கவுண்டர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பூத் முகவர்கள் அனைவரும் திமுக கட்சி உள்ளாட்சி தேர்தலில் அமோகமாக வெற்றி பெற வேண்டும் என்பதனைப் பற்றியும், புதிய உறுப்பினர் சேர்க்கைகள் பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கோவை மேற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் திரு D. பிரபாகரன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் காளப்பட்டி பகுதி கழக பொறுப்பாளர் திரு பொன்னுசாமி, 22 வது வார்டு பொறுப்பாளர் செல்வராஜ், திரு ரஞ்சித், திரு கணேஷ், அசோக், ராம்குமார், பிரவீன், சஃபி, மணிவாசகம், காளிமுத்து, திருமதி பல்கிஸ், பிரபாகரன் மற்றும் அனைத்து பூத் முகவர்களும் பங்கேற்றனர்.

-சாதிக் அலி.

Comments