தமிழகத்தில் அதிகரிக்கும் வீரியமுள்ள ஒமைக்ரான் நோய்த் தொற்று ஒரே நாளில் 33 பேர் பாதிப்பு!!

 -MMH 

    உருமாறியுள்ள அதிக வீரியமுள்ள கொரோனா வைரஸ் முதன் முதலில் கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் இதற்கு ஒமைக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா உட்பட 106 நாடுகளுக்கு வேகமாக பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேசமயம் நம் நாட்டில் இதுவரை 228 பேருக்கு ஒமைக்ரான் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே ஒமைக்ரான் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் ஒமைக்ரான் நோய்த்தொற்று மேலும் பரவாமல் இருக்க தமிழக அரசு  பல்வேறு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள்  எடுத்து வருவதாக தெரிவித்து வந்த நிலையில் தமிழக மக்கள் நோய்த் தொற்று அச்சத்தில் இருந்து விடுபட்டு இருந்தனர்.

ஆனால் இன்று தமிழகத்தில் புதிதாக ஒரே நாளில் 33 பேருக்கு ஒமைக்ரான் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன்மூலம் தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் தமிழக மக்கள் கலக்கமடைந்துள்ளனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

முகக் கவசம் அணிவோம் சமூக இடைவெளியை கடைபிடிப்போம் பாதுகாப்பாய் இருப்போம் என்ற சிந்தனையோடு,

தமிழக துணை தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார்.

Comments