35 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்! ஒருவர் கைது, ஒருவர் தலைமறைவு!!

  -MMH 

    வாணியம்பாடி அருகே கொட்டகையில் 35 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான  குட்கா பறிமுதல் ஒருவர் கைது ஒருவர் தலைமறைவு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்குபட்டு வட்டத்தில் மாட்டு தீவனம் சேமிப்பு கொட்டகையில் 35 மூட்டைகளில்  பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்து 

தென்னரசு என்பவரை கைது செய்து தலைமறைவாக உள்ள பூவரசன் என்பவரை அம்பலூர் போலீசார் தேடி வருகின்றனர். மேலும்  இவர்களிடம் குட்கா கொள்முதல் செய்த 10 கடை உரிமையாளர்களிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-ரமேஷ், வேலூர்.

Comments