திவ்யோதயா 40 ஆம் ஆண்டு விழா!!

   -MMH 

   கோவை நகரில் கடந்த 40 ஆண்டுகளாக திவ்யோதயா எனும் பல்சமய கலந்துரையாடல் மையம் மத நல்லிணக்கத்திற்காக செயல்பட்டு வருகிறது அந்நிறுவனத்தின் 40ஆம் ஆண்டுவிழா இன்று விழாவாக கொண்டாடப்பட்டது. அதில் கோவை நகரிலுள்ள சர்வமத தலைவர்கள், முன்னாள் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், கிறிஸ்துவ சமய தலைவர்கள், மற்றும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்ட நிகழ்வு நடைபெற்றது.

அதில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் இன் கோவை மக்கள் தொடர்பு செயலாளர் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி தாளாளர் முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் நாளேட்ஜ் சென்டர் ஆசிக் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மவ்லவி இஸ்மாயில் இம்தாதி அவர்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார்கள் முக்கிய தலைவர்களுக்கு நாலேட்ஜ் சென்டர் சார்பாக இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

ஒரு சிறந்த மத நல்லிணக்க விழாவாக இவ்விழா இருந்தது. 40 ஆண்டு கால வரலாற்றை பகிர்ந்து கொண்டார்கள் ஜமாத்தின் கோவையின் செயல்பாடுகள் பற்றி பகிர்ந்து கொள்ளப்பட்டது!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments