ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 5 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் திருட்டு!!
காளப்பட்டியில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 5 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் திருட்டு- கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காளப்பட்டி சுப கணேஷ் நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் நவீன் பாலாஜி (வயது 24) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரும் இவரது மனைவியும் நேற்று வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது, சுப கணேசன் மனைவி மேஜை டிராயரில் கழட்டி வைத்து இருந்த 3 பவுன் வைரம் பதித்த 5 லட்சம் மதிப்பிலான தங்க நகை மேஜை டிராயரில் இருந்து காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த விஷயத்தை தன் கணவருக்குத் தெரிய படுத்தவே அவர் கோயில்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் சுப கனேஷ் வீட்டில் உள்ள பணியாளர்களை விசாரித்து வருகின்றனர்.
-சாதிக் அலி.
Comments