சென்னை விமானநிலையத்தில் ரூ.65.5 லட்சம் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்! 3 பேர் கைது!!

   -MMH 

   மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் 3 பயணிகளிடம் இருந்து ரூ.65.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். 

சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு நேற்று துபாயிலிருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் கண்காணித்து சோதனை செய்தனர். இச்சோதனையில், சிவகங்கையை சேர்ந்த 2 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனியறையில் வைத்து, அவர்களின் சூட்கேஸ்களை சோதனை செய்தனர்.

-வேல்முருகன் சென்னை.

Comments