70 அடி கிணற்றில் விழுந்த பசுமாட்டை விரைந்து மீட்ட காட்பாடி தீயணைப்புத்துறையினர்!!

   -MMH 

   காட்பாடி அடுத்த கரசமங்கலத்தில் 70 அடி கிணற்றில் விழுந்த பசுமாட்டை விரைந்து மீட்ட காட்பாடி தீயணைப்புத்துறையினர்.

காட்பாடி அடுத்த கரசமங்கலம் கொல்லை மேடு பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான மேய்ச்சலுக்காக சென்ற பசுமாடு அப்பகுதியில் உள்ள சுமார் 70 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக காட்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து கயிறு கட்டி சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பின்பு பசுமாட்டை உயிருடன் மீட்டனர். தீயணைப்பு துறையினரின் இந்த செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

-ரமேஷ், வேலூர்.

Comments