75 நிமிடம் 75 நொடி தெடர்ந்து இசைக்கருவிகளை வாசித்து சாதனை படைக்க முயற்சி!!

-MMH

     75 நிமிடம் 75 நொடி பாரம்பரிய இசைக்கருவிகளை தொடர்ந்து வாசித்து சாதனை படைக்க முயற்சி.  சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை சார்பாக கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பாரம்பரிய இசைக்கருவிகள் பம்பை மற்றும் உடுக்கை இசைக்கலைஞர்கள் ஐ நா சபை உடைய 75வது ஆண்டையும் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் 75 நிமிடம் 75 நொடி தொடர்ந்து பம்பய் மற்றும் உடுக்கை வாசிய கருவிகளை தொடர்ந்து வாசித்து ஐக்கிய கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க முயற்சி செய்துள்ளனர். இந்த சாதனையை ஐக்கிய கலாம் உலக சாதனை புத்தகத்தில் நிறுவனத் தலைவர் முனைவர் செந்தூரப் பாண்டியன் பார்வையிட்டார். பிறகு அதனை உலக சாதனையாக அறிவித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் கவுன்சிலர் ஆர்.எஸ்.திருமுகம் கலந்து கொண்டு பாரம்பரிய இசை கலைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் ஐக்கிய காலம் உலக சாதனை புத்தகத்தில் தமிழ்நாடு தலைவர் ஜாக்சன் அலெக்ஸ் மற்றும் கோவை கோலோக பிருந்தாவனம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் முனைவர் விக்னேஷ்வரி உடன் இருந்தனர்.

-சாதிக் அலி.

Comments