கோவை செழியனின் 91 வது பிறந்த நாளை ஒட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!!

    -MMH 

கோவை செழியனின் 91 வது பிறந்த நாளை  கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனை ஒட்டி கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக அக்கட்சியின் கோவை கிழக்கு மாநகர செயலாளர் தனபால் தலைமையில் இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகே கோவை செழியனின் உருவ படத்திற்கு அக்கட்சி சார்பில்  மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கு முககவசம், குப்பையை அகற்றும் உபகரணம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. 

நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநகர தலைவர் பொன்னுசாமி பொருளாளர் மகேஷ் குமார்,  தலைமை நிலைய செயலாளர் வடிவேல், மாநில தொழிற்சங்க துணைத் தலைவர் அய்யாசாமி,ஆறுச்சாமி, மகளிர் அணிச் செயலாளர்கிருஷ்ணவேணி, ஐடி விங் செயலாளர் சந்தோஷ் மற்றும் மாநகர பகுதி கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments