வாஜ்பாயின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!!

 -MMH 

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97வது  பிறந்த நாளை நல்லாட்சி தினமாக முன்னிட்டு, கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 16  குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.க மாவட்டத் தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். 

அமைப்பு சாரா மற்றும் பொற்கொல்லர் அணி பிரிவு சார்பில் தங்க மோதிரம் குழந்தைகளுக்கு தலா 1 /2 கிராம் மோதிரம்  அணிவிக்கப்பட்டது. மாவட்ட பொதுச்செயலாளர் முரளி, அமைப்பு சாரா அணி மாவட்ட தலைவர் புவனேஷ், பொற்கொல்லர் அணி மாவட்ட தலைவர் ஜெகன், துணைத் தலைவர் சுப்பிரமணியம், வழக்கறிஞர் பிரிவு கோவை மண்டல தலைவர் மோகன், அரசு மருத்துவமனை உதவி இயக்குனர் மணிவண்ணன், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் பிரேம் குமார், மகேஷ் , சுவாமிநாதன், பூபதி, பிரதாப், ராஜ் குமார்,டேவிட், பாஸ்கர், கோவிந்தராஜ், ராகவேந்திரா  உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments