போக்குவரத்து விதிமீறல் இல்லா சாலை சந்திப்பு'!!

   -MMH 

   போக்குவரத்து விதிமீறல் இல்லா சாலை சந்திப்பு! கோவை மாநகரில் 25 இடங்களில் விழிப்புணர்வு முகாம்!விபத்துகளை குறைக்க நடவடிக்கை என போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் கூறினார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் கோவை மாநகர பகுதிகளில் 25 இடங்களில் ''போக்குவரத்து விதிமுறை மீறல் இல்லா சாலை சந்திப்பு'' என்ற விழிப்புணர்வு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிவேகமாக வந்தாலோ அல்லது ஹெல்மெட் இல்லாமல் வந்தாலோ அவர்களை பிடித்து நாற்காலியில் அமர வைத்து அவர்களுக்கு போக்குவரத்து காவலர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

மேலும் அவர்களிடம் உறுதி மொழி பத்திரம் ஒன்றை கொடுத்து ஒன்றை படிக்கச் சொல்லி அறிவுரை வழங்கி வருகின்றனர்.

அந்த உறுதிமொழியில் ''நான் எனது இரண்டு நான்கு சக்கர வாகனத்தில் இந்த வழியாக வரும்போது கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக ''போக்குவரத்து விதிமீறல் இல்லா சாலை சந்திப்பு'' என்ற விழிப்புணர்வு முகாம் நடப்பதை அறிந்து கொண்டேன்.

நான் எனது வாகனத்தில் போக்குவரத்து விதிமீறல் செய்துவிட்டேன். விதிமீறல் செய்ததை அறிந்து கோவை மாநகர போக்குவரத்து காவலர்கள் என்னை அழைத்து விதி மீறல் குறித்து எனக்குத் தெரிய செய்து அறிவுரை வழங்கினார்கள்.

இவ்வாறு விதி முறைகளை கடைபிடிப்பதன் மூலம் விபத்துகளையும், உயிர் இழப்புகளையும் தவிர்க்கலாம் என்பதை நான் நன்கு உணர்ந்து கொண்டேன். நான் இனிமேல் எனது வாகனத்தில் கோவை மாநகர சாலைகளை பயன்படுத்தும் போது போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

இந்த விழிப்புணர்வு முகாம் மூலம் கோவை மாநகரில் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments