சிவகங்கை அருகே சிறுவனின் அதீத நினைவாற்றல்! சாதனை புத்தகங்களில் இடம்பிடித்தார்!

   -MMH 

   சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூரை சேர்ந்த பாலாஜி மற்றும் நந்தினி தம்பதியின் இரண்டரை வயது மகன் மாயன். இந்த வயதில் குழந்தைகள் சரியாகப் பேசுவதென்றாலே மிகப்பெரிய விஷயம்.

ஆனால், இச்சிறுவனுக்கு சிறுவயது முதலே அதீத நினைவு ஆற்றல் இருந்திருக்கிறது. எந்த ஒரு பெயரைச் சொன்னாலும் படத்தைக் காட்டினாலும், அதை மறக்காமல் ஞாபகப்படுத்தி எத்தனை நாள் கழித்து கேட்டாலும் சொல்லும் அளவுக்கு நினைவாற்றல் இருந்துள்ளது. இதையுணர்ந்த இவரது பெற்றோர்கள், இவருக்கு முதலில் தலைவர்கள் படங்கள், பழங்கள் போன்ற படங்களை கற்று கொடுத்துள்ளனர். அதை மிக வேகமாக கற்று, உடனே சொல்லியுள்ளார் .

இதனைத் தொடர்ந்து 247 தமிழ் எழுத்துக்கள், எண்கள், வாகனங்கள், ஆங்கில மாதங்கள், தமிழ் மாதங்கள், மாநிலங்கள் அவற்றின் தலைநகரங்கள், வடிவங்கள் ஆகியவற்றை ஆல்பங்களாகத் தயாரித்து, கற்றுக் கொடுத்துள்ளனர். அதை வேகவேகமாக கற்றுக் கொண்டு மழலை குரலில் திரும்பக் கூறியுள்ளார்.

இவரின் திறமையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இவரின் சாதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற இரு சாதனை புத்தகங்களிலும் இவரின் சாதனை இடம்பெற்றுள்ளது.

இதுவரை இந்தச் சாதனை செய்த சிறுவர்கள் 4வயதுக்கு மேல் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டரை வயதில் சரியாகபேசக் கூட தெரியாத குழந்தைகள் மத்தியில் இவரது நினைவாற்றல் வியப்பாகவே இருக்கிறது.

இச்சிறுவனின் தாய் நந்தினி கூறுகையில், எனது மகனிடம் அதிக நினைவாற்றல் இருப்பதை அறிந்தோம். இரண்டு வயது முதல், தலைவர்களின் படங்கள், தமிழ் எழுத்துக்கள், ஆங்கில எழுத்துக்கள், தமிழ் மாதங்கள், ஆங்கில மாதங்கள், எண்கள், தலைநகரங்கள், மாவட்டம் அனைத்தையும் கற்றுக் கொடுத்தோம்.

அனைத்தையும் வேகமாக கற்றுக்கொண்டு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இரண்டிலும் இவர் சாதனை பதிவாகி உள்ளது. இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், இவர் இன்னும் பல சாதனைகள் புரிய எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் முயற்சிகளையும் செய்து வருகிறோம். மாயன், எதிர்காலத்தில் மிகப் பெரிய சாதனையாளராக வேண்டும் எங்கள் ஆசை எனத் தெரிவித்தார்.

- ராயல் ஹமீது.

Comments