பாபநாசத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது!!
பாபநாசத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 50 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு வகையான உதவிகள், திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி சிறப்புரையாற்றினார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் தலைமைக் கொறடா முனைவர் கோவி. செழியன், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா,
மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வருவாய்) மரு. சுகபுத்ரா இ.ஆ.ப. கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் வருவாய் வட்டாட்சியர் மதுசூதனன், மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணைத் தலைவரும் திமுக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம், திமுக மாவட்ட துணைச் செயலாளர் கோவி அய்யாராசு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் எஸ்.கே. முத்துச்செல்வம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், திமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் நாசர், தாமரைச் செல்வன், பேரூர் செயலாளர் கபிலன், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-மைதீன்,தஞ்சாவூர்.
Comments