சேரன் மாநகரில் வாலிபர் மாயம் ..!! போலீசில் தாய் புகார்..!!

 -MMH 

சேரன் மாநகர் பகுதியில் காய்கறிகலை விற்பனை செய்யும் வாலிபர் மாயமானதை அடுத்து, அவருடைய தாய்  போலீசாரிடம் புகார் கொடுத்தனர். புகாரையடுத்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றன.

சேரன் மாநகர் பகுதியில் சாலையோரத்தில் காய்கறி விற்பனை செய்து வருபவள் கலாராணி. இவருடைய மகன் கோவிந்தராஜன் (வயது 29). இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற கோவிந்தராஜ்  மாயமாகியுள்ளார்.

இதையடுத்து கலாராணி மற்றும் உறவினர்கள் கோவிந்தராஜை பல இடத்தில் தேடியுள்ளனர். ஆனால்,  கோவிந்தராஜ் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதனால் கலாராணி பீளமேடு போலீஸாரிடம் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை செய்து கோவிந்தராஜ்ஜை தேடி வருகின்றனர்.

-சாதிக் அலி.

Comments