கோஷ்டி மோதலில் ஈடுபட்ட இளைஞர்களை திருக்குறள் எழுத வைத்த காவல் ஆய்வாளர்!!

 -MMH 

கோவை மதுக்கரை அருகேயுள்ள ஐயப்பன் கோயிலில் திருவிழா தொடங்கியுள்ளது. யானை ஊர்வலம் நடைபெற்றபோது, இளைஞர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து, மதுக்கரை காவல் ஆய்வாளர் வைரம், உதவி ஆய்வாளர் கவியரசு மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மோதலில் ஈடுபட்ட 10 இளைஞர்களை பிடித்தனர். அவர்கள் அனைவரும் 20 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர்கள் ஆவர்.

அவர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ய வில்லை.ஆனால், செய்த தவறை உணர வேண்டும் என்பதற்காக, 10 பேரும் தலா 50 திருக்குறளை எழுதிக் காட்டுமாறு காவல் ஆய்வாளர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் அமர்ந்து திருக்குறள் எழுதத் தொடங்கினர். 10 முதல் 15 திருக்குறளே மாணவர்களால் எழுத முடிந்தது. பின்னர், மாணவர்களின் பெற்றோரை வரவழைத்த காவல்துறையினர், மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

-Ln இந்திரா தேவி முருகேசன், சோலை ஜெயக்குமார்.

Comments