சேரன் மாநகரில் குடும்பத்தகராறு காரணமாக வாலிபர் தற்கொலை..!!

 -MMH 

கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை.

சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (வயது 41) காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். தனபாலுக்கு மதுப்பழக்கம் இருந்த காரணமாக, கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தகராறு முற்றிய நிலையில் தனபாலின் மனைவி அவரை வீட்டினுள் அனுமதிக்காமல் இருந்திருக்கிறார். மேலும் தன் இரு குழந்தைகளையும் பார்க்க விடாமல் தடுத்து உள்ளதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த தனபால் நேற்று அவரது வீட்டின் வாசலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை நேற்று காலையில் ரோட்டில் சென்றவர்கள் வீட்டு வாசலில் தனபால் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சற்று நேரத்தில் அவ்விடத்தில் கூட்டம் கூடிவிட்டது. தனபால் வீட்டில் இருந்தவர்கள் இதை அறியாமல் தாளிட்டு வீட்டுக்கு உள்ளே இருந்திருக்கின்றனர். பொதுமக்கள் வீட்டில் உள்ளே இருந்தவர்களை சத்தமிடும் கதவுகளை தட்டியும் விஷயத்தை தெரிவித்தது மட்டுமல்லாமல் பீளமேடு காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் சேரன் மாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-சாதிக் அலி.

Comments