இந்திய முப்படைத் தலைமைத் தளபதிக்கு, சிங்கம்புணரியில் ஒரு தெருவோர வியாபாரியின் கண்ணீர் அஞ்சலி!!

         -MMH 

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெலிங்டன் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட மொத்தம் 13 பேர் உயிர் நீத்தனர். அவர்கள் அனைவருக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.


அதேபோல சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தின் எதிர்புறம், தெருவோரத்தில் மாலை நேர சிக்கன் ஸ்நாக்ஸ் கடை நடத்திவருபவர் பழனிச்சாமி. இவர் இந்திய முப்படை தலைமை தளபதிக்கு தனது கடையின் முன் அஞ்சலி செலுத்த முடிவு செய்தார். அதற்காக 'பிபின் ராவத்'தின் படத்தோடு ஒரு சிறிய பிளக்ஸ் பேனர் தயார் செய்து, அதற்கு மாலை அணிவித்தார்.


அப்போது அவ்வழியாக வந்த திருப்பத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராம.அருணகிரியும் அங்கு வந்து மெழுகுதிரி ஏற்றிவைத்து மலர் அஞ்சலி செலுத்தினார். இதைப் பார்த்த அருகிலுள்ள வியாபார பெருமக்கள் அனைவரும் இணைந்து நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக பிபின் ராவத் அவர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

- பாரூக், ராயல் ஹமீது.

Comments