தொழில்நுட்ப சேவையை சர்வதேச தரத்தில் திறன் உருவாக்க கோவை.கோ விரிவாக்க திட்டம் துவக்கம்!!

   -MMH 

     கோவையில் அறிவுசார் மேலாண்மை பன்னோக்கு தயாரிப்பு மென்பொருள் சேவை நிறுவனமாக உள்ள இந்தியாவில் கோவையிலும் , இங்கிலாந்திலும், லண்டனிலும் செயல்பட்டு வருகிறது. 

கோவையில் 40,000 சதுரடியிலான அலுவலகம் துவக்கியுள்ளது. தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப முதன்மை செயலர் டாக்டர் நீரஜ்மிட்டல் ஐ.ஏ.எஸ் . , அவர்கள் துவக்க விழாவில் பங்கேற்று துவக்கி வைத்தார். கோவை.கோ சர்வதேச அளவில் 2000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் , 60 உறுப்பினர்களைக் கொண்டிருந்த நிறுவனம் , 250 உறுப்பினர்களுக்கும் மேலாக உயர்த்தியுள்ளது . தொடர்ந்து வலிமையான வணிக வளர்ச்சி , புதிய தயாரிப்புகள் அறிமுகம் மற்றும் கையகப்படுத்துதலால் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளது . 

வரும் 2030 ம் ஆண்டிற்குள் கோவை.கோ மென்பொருள் சேவை துறையில் இந்தியாவிலும் , சர்வதேச முத்திரை பதிக்க , புதிய அலுவலகம் ஒரு மையமாக செயல்படும் . இதில் அளவிலும் அமைந்துள்ள அதிநவீன வசதிகள் , வேலைக்கும் வாழ்க்கைக்கும் சமநிலை காணுதல் , பொழுதுபோக்கு மற்றும் மகிழ்வான பணி நேரங்களுக்கும் இதில் வசதிகள் அமைந்துள்ளன . கோவை.கோ நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சரவணக்குமார் நிறுவனம் குறித்து விவரித்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments