கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு!!
திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி மைவாடி ஊராட்சி ராஜாவூர் பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டு அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு திமுக சார்பில் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.ஜெயராமகிருஷ்ணன்ex.MLA அவர்கள் தலைமையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஈஸ்வரசாமி, ஊராட்சி மன்ற தலைவர் முருகன் ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவக்குமார் மற்றும் ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
-துல்கர்னி உடுமலை.
Comments