விளாங்குறிச்சியில் கடைக்கு முன்பாக போர்டு வைப்பதில் தகராறு!! காரைக் கொண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதிய நபர்!!
கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் போர்ட் வைப்பதில் ஏற்பட்ட தகராறில், இரு கோஷ்டிக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அதில் ஒருவர் காரை கொண்டு இரு சக்கர வாகனம் மீது மோதி சேதப்படுத்திய சிசிடிவி வீடியோ காட்சிகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளாங்குறிச்சி பகுதியில் எலக்ட்ரிக்கல் பொருள் விற்கும் கடை நடத்தி வருபவர் தங்கராஜ். இவர் கடைக்கு அருகாமையில் கோழி கடை, மீன் கடை நடத்தி வருபவர் செல்வம். இவர்கள் இருவருக்கும் இடையில் போர்டு வைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆகவே செல்வம் தங்கராஜ் கடைக்கு முன்பு நின்று இருந்த மூன்று இருசக்கர வாகனங்களை தன் காரை கொண்டு இடித்து சேதப்படுத்திய காட்சிகள் கடைக்கு முன்பு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாயின.
தகவலை அடுத்து அங்கு வந்த பீலமேடு காவல்துறையினர் செல்வத்தை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். போர்டு வைக்கும் பிரச்சனையில் வெறியாட்டம் ஆடிய செல்வத்தின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-சாதிக் அலி.
Comments