அடையாளம் தெரியாத வாகனம் மோதி மனநலம் பாதித்த முதியவர் பலி..!!

 -MMH 

மேட்டுப்பாளையம் சிறுமுகை, கூத்தா மண்டி பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மனநலம் பாதித்த முதியவர் பலி.

கூத்தா மண்டி பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதித்த முதியவர் ஒருவர் கடந்த 3 மாதமாக அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்து வந்துள்ளார். அவருக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உணவு   வழங்கிவந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 27ம் தேதி  இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் பலியாகி உள்ளார். இச்சம்பவத்தை பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

-சாதிக் அலி.

Comments