சேரன் மாநகரில் வேப்ப மரங்களை அனுமதியின்றி வெட்டிய மர்மநபர்..!!! காரணம் என்ன? போலீசார் விசாரணை..!!!

   -MMH 

    கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியில் உரிய அனுமதியின்றி நேற்று  சாலையோரத்தில் இருந்த 6 வேப்ப மரங்களை வெட்டிய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேரன் மாநகர் பகுதியில் சாலையோரங்களில் ஏராளமான வேப்ப மரங்கள் வளர்ந்து வருகின்றனர் . நேற்று காலை சாலையோரங்களில் இருந்த 6 வேப்ப மரங்களை மர்ம நபர் ஒருவர் வெட்டியதாக தகவல் பரவியது. இதையடுத்து விளாங்குறிச்சி VAO சூர்யா அவர்கள் ஆய்வு செய்து போலீசில் புகார் அளித்தார் . புகாரின் பேரில் சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீசார் இதை செய்த மர்ம நபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

-சாதிக் அலி.

Comments