கோவையில் விமானத்தில் வெடி மருந்து கடத்த முயன்ற வடமாநில தொழில் அதிபர் கைது !!

   -MMH 

   டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் வருண் அரோரா (வயது33). இவர் விலைமதிப்புள்ள உலோகங்கள், இரிடியம் உள்ளிட்டவற்றை வாங்கும் தொழில் செய்து வருகிறார். 

இந்தநிலையில் இமாச்சலபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவரிடம் உலோக துகள்களை வாங்கிக்கொண்டு அதன் தரத்தை ஆய்வு செய்வதற்காக கொச்சி வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து கோவை வந்து கோவையிலும் அதனை தங்கத்தை பரிசோதனை செய்பவர்களிடம் கொடுத்து ஆய்வு செய்துள்ளார். 

இதைத்தொடர்ந்து 2½ கிலோ உலோக துகள்களுடன் கோவையில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக வருண் அரோரா வந்துள்ளார்.

அப்போது அவர் வைத்து இருந்த உலோக துகள்களில் வெடிமருந்துகள் கலந்து இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பிடித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில்  ஒப்படைத்தனர். 

போலீசார் அவர் வைத்திருந்த வெடிபொருட்களை  நிபுணர்களிடம் கொடுத்து பரிசோதித்தனர். அதில் நைட்ரேட் வெடிபொருள் ரசாயனம் கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வருண் அரோரா வெடிபொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments