திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்..!! தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை..!!

   -MMH 

    இவண்டு நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அனேக இடங்களில் திமுக வெற்றியும் சில இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.

அனைத்து கட்சிகளும் அவரவர்கள் கட்சி  வாக்குறுதிகளை மக்களிடையே  பரப்புரை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது அதில் திமுகவும் பல வாக்குறுதிகளை மக்களிடையே அறிவித்திருந்தது.

அறிவித்த சில வாக்குறுதிகளை  தமிழக முதல்வராக பதவியேற்ற மு க ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றினார், நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் ஆனாலும் சில வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை அதிமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்து கொண்டிருக்கின்றன. இதனடிப்படையில்திமுகவை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை திருப்பூர் டவுனில் நடத்தினர் இதில் அதிமுக  எம்எல்ஏக்கள், கட்சி உறுப்பினர்கள்  என்று பலர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா.

Comments