இந்தியாவில் முதன் முறையாக தனித்துவமான நகைகள் கீர்த்திலால்ஸில் அறிமுகம் நடிகை பிரியா பவானி சங்கர் அறிமுகம் செய்து வைத்தார்!
கோவை கிராஸ்கட் சாலையில் அமைந்துள்ள கீர்த்திலால்ஸ் ஷோரூமில் "பரிதி" என்ற பெயரில் அதன் தனித்துவமான கலெக்ஷனை இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம் செய்திருக்கிறது. எவரும் அணியக்கூடியவாறு நெகிழ்வுத்திறன் தொழில்நுட்பத்துடன் (ஃபிளெக்ஸிபிள்) தொழில்நுட்பத்துடன் தனித்தன்மை வாய்ந்த, குளோஸ் செட்டிங் வளையல்களாக பரிதி கலெக்ஷன் அறிமுகமாகிறது. பிரபல திரைப்பட நடிகை பிரியா பவானி சங்கர், இந்த அறிமுக விழாவில் பங்கேற்று, பரிதி கலெக்ஷனை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வின்போது வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து வைர ஆபரணங்கள் மீதும் ஒரு காரட்டுக்கு ரூ.10,000 என்ற சிறப்புத் தள்ளுபடி சலுகையை கீர்த்திலால்ஸ் நீட்டித்திருக்கிறது.
இந்தியாவில் முதன்முறையாக, ஆபரண தயாரிப்பில் முன்னோடித்துவமாக புத்தாக்கத்தை செயல்படுத்தி, எவரும் அணியக்கூடியவாறு நெகிழ்வுத்திறன் தொழில்நுட்பத்துடன், பாரம்பரியமான குளோஸ் செட்டிங்ஸ் வளையல்களை கீர்த்திலால்ஸ் வடிவமைத்திருக்கிறது. வேறுபடுகின்ற மணிக்கட்டு அளவுகள் இருப்பினும், யார் வேண்டுமானாலும் இந்த வளையல்களை அணிந்துகொள்ளலாம் என்பது இந்த கலெக்ஷனின் தனித்துவ அம்சமாகும். குளோஸ் செட்டிங்ஸ் வளையல்களில் தனிச்சிறப்பான வடிவமைப்புகளை உள்ளடக்கியதாக பரிதி கலெக்ஷன் திகழ்கிறது.
தனது தனித்துவமான ஆபரண வடிவமைப்புகளுக்காக கீர்த்திலால்ஸ் பல விருதுகளை வென்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், கவுரவம் மிக்க "தேசிய ஆபரண விருதுகள் 2021" நிகழ்வில் இரண்டு குறிப்பிடத்தக்க விருதுகளை கீர்த்திலால்ஸ் பிராண்டு வென்றிருக்கிறது.
'ஆண்டின் மிகச்சிறந்த முத்து ஆபரணம்' மற்றும் ஆண்டின் மிகச்சிறந்த மோதிரம்' என்ற இரு வகையினங்களில் கீர்த்திலால்ஸ்-க்கான இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.கீர்த்திலால்ஸ்ன் இயக்குனர் சூரஜ் சாந்தகுமார் கூறுகையில், இத்தருணத்தில் எமது சமீபத்திய கலெக்ஷன் பரிதியை அறிமுகம் செய்வது அளவற்ற மகிழ்ச்சியை எனக்குத் தருகிறது. இந்தியாவில் முதன் முறையாக இது அறிமுகம் செய்யப்படுகிறது. ஒரு குடும்பத்தில் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்களால் இந்த வளையல்களை அணியமுடியும் என்பதால், காலங்களைக் கடந்து, நிலைத்து நிற்பவையாக இவைகள் திகழ்வதற்கு இந்த நெகிழ்வுத்திறன் தொழில்நுட்பம் உதவியிருக்கிறது என்று கூறினார்.
-சீனி போத்தனுர்.
Comments